தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழில் 25 ஆயிரம் பேர் பாதிப்பு – 131 குடும்பங்கள் இடப்பெயர்வு!

0 280

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 75 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன என மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிவரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில்   தற்போதுவரை 7 ஆயிரத்து 584 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 508  பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பழை, கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்தத் தரவுகள் கிடைத்துள்ளன.

சீரற்ற காலநிலையால் 75 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதுவரை 8 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 139 குடும்பங்களை சேர்ந்த 463 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்   தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.