Developed by - Tamilosai
13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.
இதில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்( புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்,
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் வி.பி. சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.