Developed by - Tamilosai
யாழ்ப்பாணத்தில் வாழைக்குற்றிகளுக்குத் திடீரென மவுசு ஏற்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருநாளான நேற்றை தினம் இந்துக்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபட்டனர்.
இதில் ஓர் அங்கமாக தங்களது வீடுகளுக்கு முன்னால் வாழைக்குற்றியை நட்டு அதன் மேல் சட்டியில் எண்ணெய் ஊற்றி, திரி வைத்து தீபமேற்றுவர்.
இந்நிலையில், யாழ்.நகர்ப் பகுதியை அண்டிய பகுதிகளில் வாழைக்குற்றிகளைச் சிலர் விற்பனை செய்தனர்.
ஒரு வாழைக்குற்றி 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
அதேவேளை இம்முறை சிட்டிகளும் பல வர்ணங்கள் மற்றும் வடிவமைப்பில் விற்பனை செய்யப்பட்டன.