Developed by - Tamilosai
யாழ். கொக்குவில் கேணியடிப் பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞனே காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட குழுவால் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கை, கால் பகுதிகளில் காயமடைந்த குறித்த இளைஞன் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.