தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழில் மின்சார சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

0 71

 கெரவலப்பிட்டிய மின் நிலைய பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மின்சார சபைத் தலைமையகத்துக்கு முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு கையெழுத்து போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியினரின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் அனைத்து இடங்களிலும் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகங்களுக்கு முன்றலில் இன்று மதியம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலய முன்றலில் இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் அமெரிக்காவிற்கு கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் ஒரு பகுதியை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றதோடு, கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.