தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழில் பொலிஸாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை: சுமந்திரன் குற்றச்சாட்டு

0 157

 வடமராட்சி கிழக்கில் பொலிஸாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்தப் பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. 
குறிப்பாக நான் ஒரு முறை எனது வாகனத்தில் வரும் போது கடத்தல்காரர்கள் என்னைக் கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதைக் கண்டேன்.

அதேபோல் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளார்கள். அதாவது சட்டவிரோத மணல் அகழ்வு தனியார் காணிகளில் இடம்பெற்று வருகின்றது.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாரிடம் தகவல் வழங்கும் போது, அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறார்கள்.


 ஆனால் அவ்வாறு முறையிடும்போது மணல் கடத்தல்காரர்களிடமிருந்து பொலிஸாரிடம் முறையிட்டவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது.

அவ்வாறு தான் தற்போதைய நிலை காணப்படுகின்றது. எனவே பொலிஸாருடன் இணைந்து இந்த சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்பது நிரூபணமாகின்றது. 


எனவே இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.