Developed by - Tamilosai
நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்திற்கான ஏற்பாடுகள் பங்கீட்டு அட்டை அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.அதனை அறிந்து பெருமளவான மக்கள் வரிசைகளில் நின்று பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்த வேளை பிரதேச செயலாளர் தலையீட்டினால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டது.
இதனால் நீண்ட நேரம் வரிசையில் நின்ற மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து கோப்பாய் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மக்களை அமைதிப்படுத்தினார்.