Developed by - Tamilosai
13ஆம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்துக் கட்சிகளையும் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கூட்டுவதென்று முடிவு எட்டப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இணையவழியான கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். ஸ்ரீகாந்தா மற்றும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் வி.பி. சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.