தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு; எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது அளவீடு

0 118

 யாழ்ப்பாணம் கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சி எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் காணிகளைச் சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இன்று இடம்பெற்றன.

இருப்பினும் அங்கு கூடிய காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பை அடுத்து அந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.