தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழில் இளைஞன் மீது வாள் வெட்டு

0 27

நேற்று (18) இரவு கோண்டாவில் கிழக்கை சேர்ந்த 18 வயதுடைய ச. துசாளன் எனும் இளைஞன் மீதே இந்த வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை நவாலி சம்பந்தப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை குழு குறித்த இளைஞன் மீது வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளது.

குறித்த இளைஞன் வன்முறை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக வீதியில் ஓடிய போதிலும் துரத்தி துரத்தி சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டுவிட்டு வன்முறை கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.