Developed by - Tamilosai
மஹியங்கனை பெரஹராவில் பங்கேற்க வந்த ‘சீதா’ எனும் யானை மீது இன்று (30) அதிகாலை 03.30 மணியளவில் வனவிலங்கு அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
காட்டு யானை என நினைத்து வனவிலங்கு அதிகாரி சீதாவை சுட்டதாக மஹியங்கனை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.