தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யானை ஒன்றின் சடலம்  மீட்பு

0 88


பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள காணியொன்றில் யானையின் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் இது தொடர்பில் ஒமந்தை  பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். 

 குறித்த யானை மூன்று நாட்களிற்கு முன்பாகவே உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.