தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மோதல் காரணமாக பதற்றமான சூழல்; கந்தளாய் பொலிஸ் பிரிவில் சம்பவம்!

0 91

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளுகஸ்வெவ பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டுச் சம்பவமாக மாறியுள்ளதோடு சொத்துக்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் தற்போதும் ஒருவித பதற்றமான சூழல் நிலவுவதோடு, இளைஞர்கள் பொதுவெளியில் நடமாடுவதைத் தவிர்த்துள்ளனர்.

வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியிலுள்ள லொறியொன்றினையும் சிறியகடை ஒன்றும் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களைத் தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.