Developed by - Tamilosai
குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து மத்திய உளவுத்துறை 9 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் குடியரசு தினத்தன்று தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தை சேர்ந்த குழுக்களிடம் இருந்து இந்த அச்சுறுத்தல் இருப்பதாகவும் இவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களை இலக்கு வைத்து இந்த குழுக்கள் தாக்குதலில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது