தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மோசமான கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு

0 170

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்கள் 6 பேருக்கு கொவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதென சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 6 பேர் இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த காலங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார பிரிவுகளிடம் சுட்டிக்காட்டியிருந்தோம். எனினும் இந்த விடயம் தொடர்பில் பெரிதாக ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் சுகாதார பாதுகாப்பை மீறி செயற்படுகின்றார்கள்

முகக்கவசம் அணிவதில்லை. அத்துடன் சுகாதார பரிசோதகர்களுக்கு ஓய்வு பெற அறையில்லாத நிலைமை ஒன்று காணப்படுகின்றது.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் கடமையில் இருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.