தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மோசடிக்கு உதவிய தொழிலதிபரின் மகனுக்கு மறியல்

0 308

 சதொச உள்ளி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பம்பலப்பிட்டி தொழிலதிபரின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 வயது சந்தேகநபர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான இந்த மோசடிக்கு தேவையான போலியான ஆவணங்களைத் தயாரித்து உதவியதாக குறித்த நபருக்கு எதிராகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உள்ளி மோசடி தொடர்பில் 55 வயதுடைய பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த 06 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.