தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிராக போதுமான சாட்சிகள் எதுவும் இல்லை

0 170

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில்,  மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிராக போதுமான சாட்சிகள் எதுவும் இல்லை என பொலிஸ் மா அதிபர் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு  அறிவித்துள்ளார்.

 பொலிஸ் மா அதிபர் சார்பில்  மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, இதனை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து மனுதாரரான நீதிபதி கிஹான் பிலபிட்டிய சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா,  விசாரணையில் எந்த சாட்சிகளும் இல்லை என பொலிஸ்  மா அதிபர் அறிவித்துள்ள நிலையில், தனது சேவை பெறுநரை, நுகேகொடை நீதிவான் நீதிமன்ற வழக்கிலிருந்து விடுவிக்க அந்த நீதிமன்றுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இந் நிலையில் இந்த  ரிட் மனுவை  விசாரிக்கும் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ரஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வவைன் குறித்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி உத்தர்வை அறிவிப்பதாக தெரிவித்தனர்.

முன்னதாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபராக தன்னை பெயரிட்டு இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய மேன் முறையீட்டு நீதிமன்றில்  தாக்கல் செய்திருந்தார்.

 அம்மனுவை பரிசீலித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், கடந்த 2020 ஜூன் 08 ஆம் திகதி, நீதிவான் நீதிமன்ற விசாரணைகளுக்கு இடைக்கால தடை விதித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.