தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மேலும் 6 இலட்சம் பைஸர் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு

0 104

 அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்ட பைஸர் தடுப்பூசியின் மேலும் 6 இலட்சத்து 8,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.இதன்படி 1,817 கிலோ கிராம் நிறையுள்ள இந்தத் தடுப்பூசி அளவுகள் விமானம் மூலம், கட்டார், டோஹா வழியாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கின.

இதேவேளை, இலங்கை 5 மில்லியன் டோஸ் பைஸர் தடுப்பூசியை வாங்கியுள்ளதாகவும், அவற்றில் ஏற்கனவே ஒரு மில்லியன் டோஸ்களைப் பெற்றுள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷா தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நவம்பர் இறுதிக்குள் இலங்கை மீதமுள்ள தடுப்பூசி டோஸ்களையும் பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.