தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

0 67

 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம்  உயிரிழந்தவர்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில்  இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 725 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30  முதல்  59 வயதுக்கு இடைப்பட்ட 07 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 11 பேரும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 05 ஆண்களும் 02 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.