தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மேலும் 15 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்

0 68

மேலும் 15 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (22) காலை நாட்டை வந்தடைந்துள்ளன.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் நெதர்லாந்தில் இருந்து துபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 648 என்ற விமானத்தில் அவை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

அத்துடன் குறித்த தடுப்பூசிகள் தற்போது இலங்கை மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.