தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மேலதிக செயலாளரான சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக நியமனம்

0 418

பிரதமரின் முன்னாள் மேலதிக செயலாளரான சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்க பிரதம கொறடாவின் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.

சட்டத்தரணி சமிந்த குலரத்ன 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசுப் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

அத்தோடு லண்டனில் உள்ள 120 ஆண்டுகளுக்கும் மேலான தூதரக அதிகாரிகளின் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிய முதல் தெற்காசியர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.