Developed by - Tamilosai
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றுவரும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 190 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சரித் அசலங்க 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பெதும் நிசங்க 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அன்ரு ரஸல் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.