தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மேற்கத்திய சக்திகள் ரஷ்யாவை குறைமதிப்பிற்கு உட்படுத்த நேட்டோ பாதுகாப்பு கூட்டணி-புடின்

0 270

மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட சீனாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன.

குளிர்கால ஒலிம்பிக்கிற்கான விளாடிமிர் புட்டின் விஜயத்தின் போது பல சிக்கல்கள் குறித்த அவர்கள் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கத்திய சக்திகள் ரஷ்யாவை குறைமதிப்பிற்கு உட்படுத்த நேட்டோ பாதுகாப்பு கூட்டணியை பயன்படுத்துவதாக விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யர்களும் உக்ரைனியர்களும் ஒரே நாட்டவர்கள் என தெரிவிக்கும் புடின் எல்லையில் சுமார் 100,000 ரஷ்ய துருப்புக்களை களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை, உக்ரைனை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், நேட்டோ ஒரு பனிப்போர் சித்தாந்தத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளன.

இதேவேளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான அவ்க்கஸ் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து இரு நாடுகளும் கவலை வெளியிட்டுள்ளன.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் குறித்த ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா கடந்த ஆண்டு அறிவித்தது.

தென் சீனக் கடல் போன்ற சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் பதற்றத்தை அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட சீனாவை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறன்மை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.