Developed by - Tamilosai
மத்திய மெக்சிக்கோவில் நெடுஞ்சாலை ஒன்றில் பாரவூர்தி ஒன்று ஆறு வாகனங்கள் மீது மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச் சாவடி அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தையடுத்து பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாகவும் சில வானங்கள் முற்றாகத் தீக்கிரையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு வாகனங்களில் பயணித்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.