தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மூவரின் உயிரைப் பறித்த விபத்துக்கள்!

0 59

 நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்னேல வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டையிழந்து மின் கம்பத்தில் மோதியுள்ளது.

இச்சம்பவத்தில் கலாகபரூவ பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குளியாப்பிட்டிய – மாதம்பை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

சம்பவத்தில் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிரியுல்ல – குருநாகல் வீதியில் பேருந்து ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.