தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மூன்று நாட்களில் 806 டெங்கு நோயாளர்கள்

0 12

இந்த மாதத்தின் முதல் மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அவர் கூறுகிறார்.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில்,

20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள 476,677 டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள் 5 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.