Developed by - Tamilosai
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும், சம்பிக்க ரணவக்கவையும் நேரில் சந்திக்க வைத்து, முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைக்கூடவில்லையென தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கும் திட்டத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, திடீரென ’43 ஆம் படையணி’ எனும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். குறித்த இயக்கத்தின் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.