தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

0 275

2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறைச் சம்பவங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது சிறுபான்மைக் குழுவை வெளிப்படையாகக் குறிவைக்கும் அரசாங்கக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எரியும் வீடுகள் முதல் எரியும் உடல்கள் வரை இலங்கையில் முஸ்லிம் துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறை, சிங்கள- பெளத்த தேசியவாதத்தின் மத்தியில் 2013 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வின் வளர்ச்சியைக் கண்டறிந்துள்ளது.

இந்தப் பாகுபாடு, தண்டனையின்றி தொடர்ச்சியான கும்பல் தாக்குதல்களிலிருந்து, முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாகப் பாகுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைகளாக உருவானது.

இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வது மற்றும் உடல்களை முழுமையாக மறைக்கும் நிஹாப் ஆடை, மத்ரஸாக்கள் எனப்படும் மதப் பாடசாலைகளைத் தடைசெய்ய கொண்டுவரப்பட்ட சட்டங்கள் என்பன உள்ளடங்கும்.


இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு ஒன்றும் புதிதல்ல என்றாலும், அண்மைய ஆண்டுகளில் நிலைமை கடுமையாக மோசமடைந்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் இந்த ஆபத்தான போக்கைக் கைவிட்டு, முஸ்லிம்களை மேலும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது, குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்வது மற்றும் முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து, துன்புறுத்துதல் மற்றும் பாகுபாடு காட்டுவதற்கான அரசாங்கக் கொள்கைகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.