தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முழங்காலில் காயம்; ரஞ்சன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

0 223

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கராப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், ரஞ்சன் ராமநாயக்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (CNH) எலும்பியல் பிரிவில் அனுமதிக்குமாறு பணித்துள்ளனர்.

இந்நிலையில், அவர், இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.