தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முல்லைத்தீவு ஊடக அமையம் நாளை திறப்பு – புலனாய்வாளர்களால் இன்று அச்சுறுத்தல்

0 281

 முல்லைத்தீவு ஊடக அமையம் நாளை திறக்கப்படவுள்ள நிலையில்  புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றி வருகின்ற ஊடகவியலாளர்களின் அமைப்பாக காணப்படுகின்ற முல்லைத்தீவு ஊடக அமையத்திற்கான புதிய அலுவலகமானது நாளை திறந்துவைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த கட்டடத்தை சூழ இராணுவப் புலனாய்வாளர்கள், சிவில் உடை தரித்த பொலிஸ்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் சிவில் உடை தரித்த பொலிஸ்துறையினர், நாளைய நிகழ்வு தொடர்பாகவும், யார் யார் வருகிறார்கள் எனவும் ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெறும் குறித்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் கலாநிதி எஸ். ரகுராம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.