தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்திய முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் – 🔴Live நேரலை

0 324

நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட இராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது. கீழே விழுந்த ஹெலிகொப்டர் தீப்பிடித்ததில் உடல் கருகி உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகொப்டரில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் பயணித்தார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் நிலை என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை.

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் பிபின் ராவத்துடன் அவரது மனைவியும் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நீலகிரியில் விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகொப்டர் விமானப்படையின் எம்.ஐ. வகையை சேர்ந்தது.

இராணுவ மூத்த உயரதிகாரிகளுடன் சூலூரில் இருந்து வெலிங்டனுக்கு சென்ற ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 4 பேரின் உடல்களும் தீயில் கருகி உள்ளதால் இறந்தது யார்? யார்? என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவையில் இருந்து சூலூர் வந்தவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

பிபின் ராவத், அவரது மனைவி, இராணுவ அதிகாரிகள் எல்.எஸ்.லிட்டர் ஹர்ஜிந்தர் சிங், பாதுகாவலர்கள் குர்சேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, சத்பால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 வி5 வகை ஹெலிகொப்டரில் பிபின் ராவத் பயணித்துள்ளார்.

இதனிடையே முப்படைகளின் தலைமைத்தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.