Developed by - Tamilosai
முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அபார வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி இன்று ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அஸ்திரேலியா முதலில் இலங்கையை துடுப்பாட அழைத்தது.இதங்கிணங்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவதற்குள் இலங்கை அணி 19 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 134 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் எடுத்தனர்.