Developed by - Tamilosai
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்மீது ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முட்டைவீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மேற்படி தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தார்.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்காவின் வீடு சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணை அவசியம் எனவும், ஆளுங்கட்சியானது தற்போது அடக்குமுறையைக் கையில் எடுத்துள்ளது எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.