Developed by - Tamilosai
உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டு 100வது நாளான இன்று உக்ரைன் கிழக்கு பகுதியில், தமது படைகள் செவெரோடோனெட்ஸ்க் நகரின் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியதாக அந்த நகரத்தின் ஆளுநர் அறிவித்துள்ளார்.
இந்த பழைய தொழில்துறை நகரத்தின் 70 சதவீதத்தை ரஷ்யர்கள் முன்னர் முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர். இந்தநிலையில் குறிப்பிடத்தக்க பகுதிகளை தமது படையினர் மீட்டெடுத்ததாக ஆளுநர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் முக்கிய இலக்கான இந்த நகரம் பல வாரங்களாக தொடர்ந்து எறிகனைத் தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. அமெரிக்க பீரங்கிகளின் வருகை இதற்கான காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.