தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்

0 151

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம் ஒன்று 02.01.2022 அன்று காலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கந்தையா ரமணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ ஸ்தலத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர்தேக்கத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.