தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மீனவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதியதா? யாழ். மாதகலில் மீனவர் உயிரிழப்பு

0 396

மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த திலீபன் என அழைக்கப்படும் எட்வெர்ட் மரியசீலன் (வயது-31) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மீனவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் மாதகல் கடற்பரப்பில் 200 மீற்றர் தூரத்தில் படகு கவிழ்ந்து காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து உள்ளூர் மீனவர்களினால் படகு மீட்கப்பட்டதுடன் உயிரிழந்த மீனவரின் சடலமும் மீட்கப்பட்டது.

மீனவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டும் மற்றும் உறவினர்கள் சந்தேகப்படும் நிலையில் கடற்படை அதனை மறுக்கின்றனர்.

இந்திய மீனவர்களின் றோலர் படகு மோதி இருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.