Developed by - Tamilosai
நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதன்படி, இன்று இதுவரை 617 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,44,629 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (05) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 6 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 03 ஆணும் 03 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 07 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.