தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“மீண்டும் பழைய முடக்க முறைமைக்குச் செல்வதற்குத் தயாராகின்றோமா?”

0 167

நாட்டில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே தீபாவளி பண்டிகை, திருமண வைபவங்கள் மற்றும் மரணச் சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்று பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்குச் செல்வதற்குத் தயாராகின்றோமா? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா? என்பதை அனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில்  இன்று திங்கட்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதும் நாளாந்தம் சுமார் ஐந்நூறை அண்மித்தளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதுடன் நாம் இன்னும் அபாய கட்டத்திலேயே இருக்கின்றோம் என்பது தெளிவாகிறது.

இந்த நிலைமைக்கு மத்தியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் வீதமும் மந்தமடைந்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் அதிகமாகவும் காணப்படுகிறது.

அதாவது தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.