Developed by - Tamilosai
சமையல் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் ஏற்கனவே நங்கூரமிடப்பட்டுள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே உள்நாட்டில் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அது விரைவில் சரிசெய்யப்படும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டினுள் மீண்டும் லிட்டோ எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக சில பிரதேசங்களில் இருந்து அறியக் கிடைக்கின்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
நிலவிய விலையின் கீழ் நஷ்டத்தில் தங்கள் தொழிலை தொடர்ந்தும் நடத்த முடியாது எனத் தெரிவித்து இவ்வாறு விலை அதிகரிப்பை அறிவித்திருந்தது.
இதன்படி, லிட்டோ எரிவாயு மற்றும் லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.