Developed by - Tamilosai
அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு மத்தியில் நாடு திறக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் செயற்பாடுகள் மிக மோசமாக அமைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாகவும், நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மூலமாக மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகக்கூடிய அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார்.
நாட்டில் கொவிட் 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகளில் இருந்து நாம் மீளவில்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகின்றோம்.
சுகாதாரச் சவால்களை விடவும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாகவே நாட்டைக் கட்டுப்பாட்டுடன் திறக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இது முழுமையாக ஆரோக்கியமான செயற்பாடுகள் என கருதிவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.