Developed by - Tamilosai
மக்களின் கவனயீனமான நடவடிக்கையால் எதிர்காலத்தில் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பலர் சுற்றுலா சென்றுள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் இவ்வாறான கவனயீனமான நடவடிக்கையால் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரித்தால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தயவு செய்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.