தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மீண்டும் எரிபொருள் விலை மற்றும் வரி அதிகரிக்கும்

0 442

எதிர்வரும் 06 மாதங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை மற்றும் வரி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மீள் கட்டமைப்பு செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படுவதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இந்த நிதி அவசியம் என கூறியுள்ளார்.

எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.