Developed by - Tamilosai
மில்லியன் கணக்கான உபரி தடுப்பூசிகளை, உடனடியாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்க முன்னாள் உலகத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
160 இற்கும் மேற்பட்ட முன்னாள் உலகத் தலைவர்கள் மற்றும் உலகப் பிரமுகர்கள் பிரித்தானியா மற்றும் பிற பணக்கார நாடுகளுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் போது தடுப்பூசி வீணடிக்கப்படுவது நெறிமுறையற்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் 36 முன்னாள் ஜனாதிபதிகள், 30 முன்னாள் பிரதமர்கள் மற்றும் 100 செல்வாக்கு மிக்க உலகப் பிரமுகர்கள் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.