Developed by - Tamilosai
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை மாசி மாதம் 7ஆம் திகதி முதல் பங்குனி மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக பரீட்சைகளை நடத்துவது தாமதமானதுடன், தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பரீட்சை தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.