Developed by - Tamilosai
இலங்கையின் மின்னுற்பத்தியை மேற்கொள்ள போதுமான எண்ணெய் வளம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மின்சார சபைக்கு, கனியவளக் கூட்டுத்தாபனமும் எண்ணெய் வழங்க மறுத்துள்ளது.
இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் மின்சக்தி வளத்துறை அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும் மின்சார சபை முன்வைத்த கோரிக்கையை இலங்கை மற்றும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் மறுத்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எண்ணெய் கப்பலிலிருந்து ஒரு தொகை எண்ணெய் பெற்றுக் கொள்வது தொடர்பாக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.