Developed by - Tamilosai
வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த அனுமதியற்ற மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
26 வயது இளைஞன் ஒருவரும் 18 வயது யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியின் வீட்டிற்கு அருகில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
சமூக வலைத்தளத்தில் பழக்கமான குறித்த யுவதியை காண திக்வெல்ல பிரதேசத்திலிருந்து குறித்த இளைஞன் வந்துள்ளான்.
பின்னர் யுவதியின் வீட்டிற்கு அருகில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை யுவதியின் வீட்டார் கண்டுள்ளனர்.
இதன்போது, குறித்த இருவரும் வீட்டிற்கு அருகில் சுமார் 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கருவா தோட்டத்தை நோக்கி ஓடியுள்ள நிலையில் இவ்வாறு மின்சார வேலியில் சிக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய குற்றவியல் பிரிவு மற்றும் கொலொன்ன பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.