Developed by - Tamilosai
இன்று (01) முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி வழமை போன்று மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீர் மாத்திரம் வழங்கப்படும் என மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திக்காக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களிலிருந்து மேலதிக நீரை விடுவிப்பது தொடர்பில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கடந்த இரு தினங்கள் மேலதிக நீர் வழங்கப்பட்டிருந்தது.