Developed by - Tamilosai
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனை மையவாடி வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான அகமது உசனார் லத்தீபா (வயது 51) என்ற குடும்ப பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இன்று(15) அதிகாலை 6 மணியளவில் வீட்டு வேலைகளை செய்வதற்காக குடும்ப பெண்ணொருவர் வெளியில் வந்து வீட்டிற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் கம்பியில் கை வைத்த சமயத்தில் மின்சார ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
????????????????????????????????????
மின்சார கம்பி முன் கூடாரத்திலுள்ள தகரத்தில் பட்டு சிதைவடைந்து இருந்த நிலையில் மின்சாரம் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணை குடும்ப உறவினர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.