தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்-இலங்கை மின்சார சபை

0 68

நிலவும் சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் முன்னோக்கிச் செல்வது சவாலானது என்று இலங்கை மின்சார சபையின் நிறுவன மூலோபாயம் மற்றும் ஒழுங்குமுறை உறவுகளின் பிரதிப் பொது முகாமையாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.

இதுவரையில் விலை அதிகரிப்புக்கு உட்படாத ஒரே சேவை மின்சாரம் என்று வீரரத்ன கூறியதுடன், தற்போதைய விலை நிர்ணயத்தை இனியும் பேண முடியாது என்றார்.

மழை இல்லாததால் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை என்றும், ஏப்ரல் மாதத்தில் ஒரு வல பகுதிகளில் லேசான மழை பெய்யுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.