Developed by - Tamilosai
மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளைப் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று (28) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் தடையின்றி மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.